வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு

சென்னை: அந்தமான் வங்கக் கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நிருபர்களிடம் கூறியது:
தெற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு
பகுதி 15-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதைத் தொடர்ந்து மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு ஆம்பன் என பெயரிடப்பட கூடும் என்றார்.
புயல் உருவாக வாய்ப்பு உள்ளதால், வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் வரும் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.