பேரூராட்சியில் கொவைட்-19 பாதிப்பு கணக்கெடுப்பு
அலங்காநல்லூர், ஜூலை 9: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சியில் கொவைட்-19 பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், பேரூராட்சி உதவி இயக்குநர் எஸ். சேதுராமன் ஆகியோர் ஆலோசனையின் பேரில், அலங்காநல்லூர் பேரூராட்சி இரண்டாவது வார்டில் கொவைட்-19 கணக்கெடுப்பு பணியை, பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமி பாண்டியன் தொடங்கி வைத்தார். நகர்புற வாழ்வதார இயக்கத்தின் சமுதாய அமைப்பாளர் பிச்சை, வரித்தண்டலர் கண்ணன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
You must log in to post a comment.