தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது
சென்னை: தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,246-ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கையும் 11,313-ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, வெள்ளிக்கிழமை மட்டும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 765-ஆக உள்ளது.
அதே நேரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் 874 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 618 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
You must log in to post a comment.