தமிழகம்:கொரோனாவால் பாதித்தோர் 22,333-ஆக உயர்வு


சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,333-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இடம்பெற்ற தகவல்கள் :
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 1149 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 22,333-ஆக அதிகரித்துள்ளது.
நோய்த் தொற்று பாதிப்பால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தோர் எண்ணிக்கை 13. ஞாயிற்றுக்கிழமை கொரோனா நோய்த் தொற்று அறியப்படவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் 804 பேர்.
தற்போது தமிழகத்தில் மருத்துவமனைகளில் இந்நோய்த் தொற்றுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9.400. இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 2,052 பேர். அதேபோல் பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 12,757-ஆக உயர்ந்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.