தமிழகத்தில் ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி

சென்னை: தமிழகத்தில் சனிக்கிழமை 1458 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
தமிழகத்தில் சனிக்கிழமை கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்ட 1458 பேரில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 35 பேர் அடங்குவர். சென்னையில் மட்டும் 1,146 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,152-ஆக உள்ளது. இவர்களில் 16,395 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 251-ஆக அதிகரித்துள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.