கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

சோழவந்தான்: சோழவந்தானில் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வியாபாரிகள் கடைகளைத் திறந்திருக்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.

சோழவந்தான் பேரூராட்சி திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான்பானு, முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.கே. முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முத்துக்குமார் வரவேற்றார். இதில் துப்புரவுப்பணி ஆய்வாளர் குருசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் வாண்டையார், அனைத்து வியாபாரிகள் நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், ஜவகர்லால், பி.டி.ஆர். பாண்டி, இருளப்பன் ஆகியோர் தடுப்பு நடவடிக்கை குறித்தும் வியாபாரிகள் ஒத்துழைப்பு குறித்தும் பேசினர்.

அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் கடைகளை காலை 6 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், டீ கடைகள் காலை 6 முதல் மாலை 6 மணி வரையிலும், ஹோட்டல்கள் காலை 6 முதல் இரவு 8 மணி வரையிலும் பார்சல் மட்டும் வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. தலைமை காவலர் சுந்தரபாண்டியன் நன்றி தெரிவித்தார்.

இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம், தூய்மைப்பணி மேற்பார்வையாளர் சின்னச்சாமி, வியாபாரிகள் சரவணன், மாரியப்பன்,காளி உட்பட அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.