கொரானா நோய்த் தடுப்பு முகாம்
செங்கல்பட்டு, ஜூன் 30: புதுப்பெருங்களத்தூரில் கொரானா நோய்த் தடுப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், புதுப்பெருங்களத்தூர் காமராஜர் சாலை குழந்தைகள் பூங்கா அருகே பீர்கங்கரணை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரானா நோய் தடுப்பு முகாம் நடந்தது.
இந்த முகாம் டாக்டர் காண்டீபன் தலைமையில் ரஞ்சிதா மலர் செல்வராணி உள்ளிட்ட செவிலியர்கள் கொண்ட மருத்துவக் குழுவினர் பொது மக்களுக்கு உடல் வெப்பநிலை, சளி மற்றும் காச்சல் ஆகியவற்றுக்கான மருத்துவ பரிசோதனைகளை செய்து கபசர குடிநீரை இலவசமாக வழங்கினர்.
மேலும் கொரானாவை நாம் எப்படி எதிர்கொண்டு நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. கொரானா நோய்த் தடுப்பு முகாமில் புதுப் பெருங்களத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள விரிவாக்கப்பகுதியில் உள்ள மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
You must log in to post a comment.