கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை உயர்வு
சென்னை: கொரோனா நோய்த் தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 10 ஆயிரத்து 548 பேர் மீண்டுள்ளனர். கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை8 ஆயிரத்து 676-ஆக உள்ளது.
கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியது:
தமிழகத்தில் இன்று 639 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் கொரொனா சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 10,548-ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரு நாளில் மட்டும் 827 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 117 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்றார் அமைச்சர்.
சென்னையில் இன்று 559 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து சென்னையில் கொரோனாவல் பாதித்தோர் எண்ணிக்கை 12,762-ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 145-ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 4 லட்சத்து 55 ஆயிரத்து 216 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
You must log in to post a comment.