மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி

சோழவந்தான், ஜூன்.30: சோழவந்தான் அருகே முள்ளிப் பள்ளம் கிராமத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

வருவாய் ஆய்வாளர் ராஜன், வி.ஏ.ஓ.மணிவேல் ஆகியோர் முன்னிலையில் வாடிப்பட்டி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவக்குமார் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிதியுதவி வழங்கினார். இதையடுத்து சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவக்குமார் கூறுகையில் “மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் தற்போது கொரோனா நிவாரண சிறப்பு நிதியாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

ஆகையால் மாற்றுத் திறனாளிகள் அவர்களது ஒரிஜினல் அடையாள அட்டை மற்றும் ஆதார், பேங்க் பாஸ்புக் நகல் ஆகியவற்றை அந்தந்த பகுதி வி.ஏ.ஓ விடம் கொடுத்து உடனடியாக ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.