கொரானாவுக்கு 5 பேர் பலி
செங்கல்பட்டு, ஜுலை 5: பெருங்களத்தூரில் கொரானா நோய்த் தொற்று பாதிப்பால் இதுவரை 5 பேர் இறந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், புதுப் பெருங்களத்தூரில் கொரானா நோயால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த நோயை கட்டுக்குள் கொண்டு வர அரசு நிர்வாகம் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. அதன் படி வீட்டுக்கு வீடு சென்று மக்களுக்கு நோய் பரிசோதனை செய்வது மற்றும் அனைத்துப் பகுதியிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைப்பது போன்ற மருத்துவ பணிகளை மேற்கொள்கிறது.
அதன்படி 45000 மக்கள் வசிக்கும் புதுப் பெருங்களத்தூர் சிறப்புநிலை பேரூராட்சியில் கடந்த ஜூன் 29 முதல் ஜுலை 6 வரை இந்த கொரானா சிறப்பு தடுப்பு முகாம் செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயீஸ் ஆலோசனைப்படி காமராஜர் சாலை குழந்தைகள் பூங்கா, காந்தி நகர் மெயின் ரோடு, காமராஜர் சாலை சிவன் கோயில் அருகே, கிருஷ்ணா ரோடு , பார்வதி நகர், ஆர்.எம்.கே. நகர், காமராஜர் சாலை காமாட்சியம்மன் கோயில் அருகே ஆகிய இடங்களில் இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களை பரிசோதித்துக் கொண்டனர். பெருங்களத்தூரில் மொத்தம் 94 நபர்களுக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.
You must log in to post a comment.