கொரானா தடுப்பு பரிசோதனை முகாம்
செங்கல்பட்டு, ஜூலை 1:செங்கல்பட்டு மாவட்டம், பீர்கங்கரணையில் கொரானா தடுப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் பீர்கங்கரணை தேர்வுநிலை பேரூராட்சியில் கொரானா தொற்று நோய் பரிசோதனை முகாம் பீர்கங்கரணை கிராமத்தில் உள்ள பெரிய முத்து மாரியம்மன் கோயில் வாசலில் புதன்கிழமை நடந்தது. முகாமிற்கு டாக்டர் பூவிதா தலைமை தாங்கினார். புவனேஸ்வரி மற்றும் மகேஸ்வரி ஆகிய செவிலியர்களுடன் ஆரம்ப சுகாதார பணியாளர்கள் லில்லி ஜகதீஸ்வரி, சுமதி, சசிகலா, கலைச்செல்வி, ரேகா, ஆனந்தி, காயத்ரி, ராதிகா, ஹேமா ஆகிய சுகாதார நிலைய ஊழியர்களுடன் இந்த கொரானா தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
காலை, மாலை இரு வேளையிலும் நடைபெற்ற முகாமில் பொதுமக்கள் பலரும் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொண்டனர். பரிசோதனையை அடுத்து உரிய மருந்துகள் மற்றும் அறிவுரைகளை மருத்துவர்கள் வழங்கினர்.
முகாமில் பங்கேற்றோருக்கு பொது இடங்களில் தக்க தனிமனித இடைவெளியேக் கடைபிடிக்குமாறும், கட்டாயம் முகக் கவசம் அணியுமாறும், தேவையின்றி வெளியில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது. கொரோனா அறிகுறிகள் காணப்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
You must log in to post a comment.