காட்பாடியில் கரோனா சிறப்பு மருத்துவ முகாம்

வேலூர்:  காட்பாடி டிகேஎம் திருமண மண்டபத்தில் வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரின் உத்தரவின்பேரில் கரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

இந்த மருத்துவ முகாமில் தாராபடவேடு நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஆர்.அகிலா அவர்கள் தலைமையில் மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனைகளை செய்தனர்.

வேலூர் மாநகராட்சியின் மேற்பார்வையாளர் டேவிட் முன்னிலையில் நடைபெற்றது.  இதற்கு உதவியாக காட்பாடி ரெட்கிராஸ் சங்கச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன்,  அவை துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன்,  பொருளாளர் வி.பழனி,  ஆயுள் உறுப்பினர்கள் எ.ஆனந்தகுமார்,  தன்னார்வ தொண்டர்கள் செ.ஜ.சோமசுந்தரம், செ.ஜ.உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் உதவி புரிந்தனர்

இந்த மருத்துவ முகாமில் செவிலியர்கள் ஜி.அம்மு, எம்.ஷர்மிளாதேவி, எஸ்.அம்பிகா, டேபோரா தேவமகிமைசெல்வி, கே.பிரியங்கா, ஜி.ஏசம்மா ஆகியோர் மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். இப்பகுதியை சேர்ந்த 120 பேர் வருகை தந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.  வேலூர் மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் கே.ரகு, கே.பிச்சையன், எ.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் துப்புறவு பணிகளை மேற்கொண்டனர்.

 

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.