கொரோனா: வாகன பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார் ஆட்சியர்

வேலூர்: வேலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ரோட்டரி சங்கம், ரெட்கிராஸ் சங்கம் ஆகியன இணைந்து நடத்தும் கொரோனா விழிப்புணர்வு தொடர வாகன பிரசாரத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ரோட்டரி மாவட்டம் 3231, இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி வட்டக் கிளை இணைந்து நடத்தும் கொரோனா விழிப்புணர்வு தொடர் வாகன பிரசாரத்தினை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவக்கி வைத்தார்.

ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆடிட்டர்.கே.பாண்டியன் தலைமை தாங்கினார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் க.பூபாலன் வரவேற்று பேசினார்.  ரோட்டரி சங்க உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் ஶ்ரீதர்பலராமன், வருங்கால ஆளுநர்கள் நிர்மல்ராகவன், ஜெ.கே.என். பழனி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் பா.ராஜேந்திரன், காட்பாடி ரெட்கிராஸ் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன்  ஆற்காடு கோட்டை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் இறைமொழி, பாலநாகராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் முத்து.சிலுப்பன், ப.சேகர், கருத்தாளர்கள் ரவீந்தரன், கார்த்தி ஆர்.கே.அறக்கட்டளை தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் நவீன் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் ஜோசப் அன்னையா நன்றி கூறினார்.

ஆற்காடு கோட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பாக 1000 முக கவசங்கள், 500 ஆர்கனிக் ஆல்பம் மாத்திரைகள் 500 நபருக்கான கபசுர குடிநீர் பவுடர் பாக்கெட்டுகள், கைகழுவும் சுத்திகரிப்பான் போன்றை மாவட்ட ஆட்சியர் மூலமாக வழங்கப்பட்டு தொடர் வாகன பிரசார வாகனத்தில் கொண்டு சென்று விநியோகிக்கப்பட்டது.

மாநகராட்சி ஆணையர் சங்கரன் வாகனப் பயண திட்டத்தினை வகுத்தார். இன்று வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 3-வது மண்டலத்தில் உள்ள சத்துவாச்சாரி பகுதியில் துவங்கியது.  இந்த வாகன பிரசாரம் 15 நாள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வேலூர் மாநகராட்சி, பள்ளிகொண்டா, குடியாத்தம் பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளிலும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.