கொரோனா விழிப்புணர்வு வாகனப் பிரசாரம்

வேலூர்: வேலூர் மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ரோட்டரி மாவட்டம் 3231, இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி வட்டக்கிளை தமிழ்நாடு இளம் குழந்தைகள் பராமரிப்பு கூட்டமைப்பு ஆர்கே அறக்கட்டளை இணைந்து நடத்தும் கொரோனா விழிப்புணர்வு தொடர் வாகனத்தின் 14-ஆவது நாள் பிரசாரத்தை காட்பாடி வள்ளிமலை கூட்டுரோடு சந்திப்பில் இருந்து காட்பாடி ரெட்கிராஸ் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் தொடங்கி வைத்தார்.

வேலூர் வடக்கு ரோட்டரி சங்க தலைவர் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ஏ.சுந்தரபாண்டியன்,  தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகக்குழு ப.சேகர் காட்பாடி ஒன்றிய செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், பொருளார் லோகநாதன், காட்பாடி ரெட்கிராஸ் அவைதுணைத்தலைவர் ஆர்.சீனிவாசன், ஆகியோர் பங்கேற்று பேசினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மனோகரன், விஜய், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் கே.ராஜேந்திரன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் பி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.கே.அறக்கட்டளை மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் பி.பானுமதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு துண்டறிக்கையினையும் முக கவசங்களையும் காட்பாடி காட்பாடி காவல் உதவி ஆய்வாளர்கள் மனோகரன், விஜய் ஆகியோர் வழங்கி துவக்கி வைத்தனர்.

 காட்பாடி வள்ளிமலை சாலை சந்திப்பிலிருந்து துவங்கிய விழிப்புணர்வு பிரசார வாகனம், செங்குட்டை, வண்டறந்தாங்கல், கல்புதூர், மெட்டுக்குளம், கிறிஸ்டியான்பேட்டை வள்ளிமலை சாலை, வசந்தபுரம், அசோக்நகர், கணக்கர்தெரு, விடிகே நகர், பள்ளிகுப்பம் கேட், சக்கராகுட்டை, கசம், வரதராஜபுரம், கண்டிப்பேடு, சேர்க்காடு, கூட்டுரோடு, திருவலம் பேரூராட்சி பகுதிகள்,  கரிகிரி, சேவூர், பிரம்மபுரம்    ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தது. அப்பகுதிகளில் முக கவசங்களும், அரசின் விழிப்புணர்வு துண்டறிக்கைகளும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஜுலை 20ஆம் தேதி துவக்கி வைக்கப்பட்ட இந்த பிரசார வாகனம், 20,21,22 ஆகிய நாள்கள் வேலூர் மாநகராட்சி பகுதியிலும் 23,24,25,26 ஆகிய நாள்களில் குடியாத்தம், பேர்ணாம்பட்டு 27, 28 தேதிகளில் கே.வி.குப்பம், 29 காட்பாடி வட்டம் வேலூர் மாநகர பகுதிகள், 30 பள்ளிகொண்டா, 31ஆம் தேதி வேலூர் வட்டத்தில் உள்ள பென்னாத்தூர் ஆகஸ்ட்-1ல் அணைக்கட்டு வட்டத்திற்கு உட்பட்ட  அணைக்கட்டு, ஒடுகத்தூர் இன்று ஆகஸ்ட்-2ல் காட்பாடி ஊரக பகுதிகளிலும்  இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.