கொரோனா தடுப்பு, விழிப்புணர்வு முகாம்

அலங்காநல்லூர், ஜூலை,8: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகேயுள்ள கோட்டைமேடு கிராமத்தில் சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகம் இணைந்து புதன்கிழமை கொரோனா தடுப்பு முகாமை நடத்தின.

முகாமுக்கு ஊராட்சி மன்றத் தலைவி சர்மிலா ஜி. ராஜாஜி தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ராமன் முன்னிலை வகித்தார். அரசு மருத்துவமனை டாக்டர் கீதா, மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். ஊராட்சி செயலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் மருத்துவ பரிசோதனை முகாமில் பங்கேற்றனர்.

மறவபட்டியில்…

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், ராஜாக்கப்பட்டி, மறவபட்டியில் நடந்த கொரோனா பரிசோதனை முகாமுக்கு ஊராட்சிமன்றத் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.

சுகாதார ஆய்வாளர் ராமன் முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வள்ளி முகாமை தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனை மருத்துவர் கீதா, கொரோனா பரிசோதனைகளை நடத்தினார். ஊராட்சி செயலர் ரெகுபதி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.