காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சோழவந்தான், ஜீலை 9: சோழவந்தானில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு சார்பில் சட்டமேதை அம்பேத்கர் வீட்டை தாக்கியதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சோழவந்தான் காமராஜர் சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு மாநில துணைத் தலைவர் ஆர்.மூர்த்தி தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் சந்தோஷ்,
மாவட்டத் தலைவா கி.சங்கரபாண்டி முன்னிலை வகித்தனர். மதுரைநகர் மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் செல்லப்பா சரவணன் தொடங்கி வைத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ,மும்பையில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் வீட்டை தாக்கி சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும். அவரின் குடும்பத்தார்க்கும், வீட்டிற்கும் தகுந்த பாதுகாப்பு தர வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள கிராமத்தில் விஷவாயுதாக்கி இறந்த மூன்று தூய்மை பணியாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் , மாவட்ட செயலாளர்கள் இளவரசன், அழகுபாண்டி, மாவட்ட துணைத் தலைவர் ராஜா, வட்டாரத் தலைவர் மாரியப்பன், நகர் தலைவர்கள் கனகராஜ்
செல்வம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.