கலங்க வைக்கும் கழிவுநீர்!

மதுரை, ஜூன் 30: மதுரை தெற்குவாசல் அருகே கடந்த சில நாள்களாக கழிவு நீர் கால்வாய் நிரம்பி அசுத்த நீர் தெருக்களில் பெருகி ஓடுகிறது. மதுரை 67.ஆவது வார்டு சிங்காரதோப்புத் தெருவில்தான் இந்த அவலம்.

இதனால் அப்பகுதி குடியிருப்போர் தொற்று நோயால் பாதிக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து மதுரை மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வருத்தமும், ஆதங்கமும் கொண்டுள்ளனர் இப்பகுதியினர்.

மதுரை மாநகராட்சி ஆணையர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையோடு சிங்காரதோப்பு தெரு மக்கள் காத்திருக்கின்றனர்.

மித்ரனின் பணி குறைகளை சுட்டிக் காட்டுவது மட்டுமல்ல…, சுட்டிக் காட்டப்படும் குறைகளின் உண்மை தன்மை அறிந்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்போது அதை பாராட்டுவதும் தான்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.