தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாகவில்லை: முதல்வர்

சேலம்: தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாகவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.

சேலத்தில் ரூ.441 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை வியாழக்கிழமை திறந்து வைத்த அவர் கூறியதாவது:

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பில் எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது. புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே கொரோனா உயிரிழப்புகள் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறவில்லை. உண்மையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன. பல்வேறு நோய்கள் உள்ளவர்களால்தான் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. நாட்டிலேயே கொரோனா உயிரிழப்பு சதவீதம் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது. அத்துடன் மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து வருவதாலும் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு வருகிறது என்றார்.

புதிதாக திறக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்துக்கு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.