அரசு அனைத்துத் துறைகளிலும் சாதனைப் படைத்து வருகிறது: முதல்வர் பழனிசாமி பெருமிதம்

சேலம்: அதிமுக அரசு அனைத்துத் துறைகளிலும் சாதனைப் படைத்து வருகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம், மேட்டூா் வட்டம், பெரிய சோரகை சென்றாயப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற முதல்வர்,

வனவாசி அரசினா் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் புதிதாக ரூ.9 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மாணவர் விடுதியை திறந்து வைத்தார். அத்துடன் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, கொங்கணாபுரம் பகுதிகளில் ரூ.44.43 கோடியில் 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று திட்டம் மூலம் நீர் வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் ஏரிகளை புனரமைத்து மேம்படுத்துதல் மற்றும் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் ரூ.74.50 கோடி செலவில் நிறைவேற்றப்படவுள்ள 33 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அவர் பேசியது:

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டால் அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழக அரசு மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகள் மக்கள் நலனை கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும். தமிழகம் முழுவதும் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டதால், குடிநீர் பிரச்சினை தீர்ந்துள்ளது. காவிரி டெல்டாவில் சுமார் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. நீர் மேலாண்மை திட்டத்திற்காக தேசிய விருதை தமிழகம்.

பெற்றுள்ளது. அதிமுக அரசு, பல துறைகளில் தேசிய விருது பெற்று சாதனை படைத்து வருகிறது.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் இருந்தபடியே அறிக்கை வெளியிட்டு வருகிறார்.  அரசின் மீது முறை கூறாமல் ஆக்கப்பூர்வமான கருத்துகளை ஸ்டாலின் கூறவேண்டும். ஸ்டாலினுக்கு நாள்தோறும் என்னைப் பற்றி நினைத்தால் தான் தூக்கம் வரும். தினந்தோறும் அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின் அறிக்கை நாயகனாக வேண்டுமானால் திகழலாம் என்றார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.