தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? 30-இல் முடிவு

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து வரும் 30-ஆம் தேதி முடிவு செய்யலாம் என மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
சென்னையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மருத்துவ நிபுணர் குழுவுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது சென்னையில் அதிக அளவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் எந்த தளர்வும் அளிக்கப்படக்கூடாது என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்தாகச் சொல்லப்படுகிறது.
சென்னையில் கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்க சிறப்பு கவனம் செலுத்துதல், புதிய உத்திகளைக் கையாளுதல், மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாக முதல்வர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
அத்துடன் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து மே 30 அன்று முடிவு செய்துகொள்ளலாம் எனவும் அக்கூட்டத்தில் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.