பண்டைய கிரேக்க அழகி கிளியோபாட்ரா தற்கொலையுண்ட நாள்

கிளியோபாட்ரா VII பண்டைய கிரேக்கத்தில் கி.மு.69-இல் பிறந்து கி.மு.30-இல் தற்கொலை செய்துகொண்ட எகிப்தை ஆண்ட தாலமி வம்சத்தின் இறுதி ராணி. பேரழகி, கருப்பழகி என்றெல்லாம் அவர் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளார். பண்டைய எகிப்தின் அரசியான இவர் 7-ஆம் கிளியோபாட்ரா ஆவார். அவருக்கு முன்பு கிரேக்க தாலமி அரச பரம்பரையில் 6 கிளியோபாட்ராக்கள் இருந்துள்ளனர்.

கிளியோபாட்ரா தன் தந்தை 12-ஆம் தாலமியுடன் ஆட்சி செய்து வந்தார். தந்தை அவருக்கு தனது அதிகாரத்தை பகிர்ந்தளித்திருந்தார். தந்தை இறந்தபோது கிளியோபாட்ராவுக்கு வயது 16. கிளியோபாட்ராவுக்கு பதின்மூன்றாம் தாலமி, பதினான்காம் தாலமி ஆகிய இரு சகோதரர்கள் இருந்தனர். 13-ஆம் தாலமிக்கு அப்போது வயது 10 என அறியப்படுகிறது. 12-ஆம் தாலமியின் மறைவுக்கு பிறகு பண்டைய எகிப்தின் முறைப்படி பெண் அரசாள இயலாது. இந்நிலையில் கிளியோபாட்ரா தனது சகோதரர்களை திருமணம் செய்துகொண்டு, மூத்தவர் கிளியோபாட்ரா என்ற வகையில் அவர் மீண்டும் எகிப்தின் அரசியாக முடிசூட்டிக் கொண்டார். அமைச்சர்களும், வணிகர்களும் 13-ஆம் தாலமியை சந்தித்து தங்களுடைய எண்ணத்தினை நிறைவேற்றிட உபயோகித்துக் கொண்டனர். இதனால் கிளியோபாட்ராவின் அரசு பறி போனதுடன், எகிப்தை விட்டு விரட்டப்பட்டார்.

சிரியாவுக்கு தப்பிச் சென்ற அவர் அங்கு கிரேக்கப் படைத் தலைவர் ஜூலியஸ் சீசரை சந்திக்கிறார். அவருடன் சேர்ந்து எகிப்தை வெல்ல திட்டமிடுகிறார். சீசருக்கும், கிளியோபாட்ராவின் கணவனான 13-ஆம் தாலமிக்கு நடந்த சண்டையில் தாலமி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து சீசர் கிளியோபாட்ராவை மணம் செய்துகொள்கிறார். அவர்களுக்கு தாலமி சீஸர் என்ற குழந்தையுண்டு.

நெடுநாள் கழித்து மகன், மகளுடன் ரோமாபுரிக்கு சீசர் சென்றபோது, பாராளுமன்றத்தில் ஜூலியஸ் சீசரின் நண்பர் புரூடஸ் சீசரைக் கொலை செய்தார். அதன்பின் ரோமில் சீசரின் வாரிசுகளுக்கும், படை தளபதிகளுக்கும் பதவிச் சண்டை நடைபெற்ற நிலையில், கிளியோபாட்ரா சீசரின் படைத் தளபதி மார்க் ஆண்டனியை மணம் புரிந்துகொண்டார். சீசரின் வாரிசான அகஸ்டஸ் கிளியோபாட்ராவை எதிர்த்தார். எகிப்தின் ஆட்சிக்காக ஆண்டனியுடன் ஆக்டோவியஸ் சண்டை மூண்டது. இதில் ஆண்டனி கொல்லப்பட்டார். ஆண்டனியின் மரணத்தை ஏற்க முடியாமல் போன கிளியோபாட்ரா தன்னை மகாராணியாக அலங்கரித்துக் கொண்டு, விஷப்பாம்புகளை தீண்டும்படி செய்து தற்கொலை செய்துகொண்டார்.

அரசியல் சாதுர்யமும், அறிவாற்றலும் கொண்டவரான கிளியோபாட்ரா பேரழகியாகவும் இருந்ததாக பதிவுகள் பறைசாற்றினாலும், அவர் கருப்பு நிறத்தவர் அல்ல. வெண்மை நிறத்தவர். அத்துடன் அவர் பேரழகி என்ற கருத்தையும் வரலாற்று ஆசிரியர்கள் பலர் மறுத்துள்ளனர். வரலாற்று ஆசிரியரான ப்ளூடார்க், கிளியோபாட்ரா பேரழகி இல்லை என்கிறார்.

கிளியோபாட்ரா பேரழகியோ, இல்லையோ, ஆனால் அவர் மிகுந்த அறிவாற்றல் கொண்டவர் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் மறுக்கவில்லை. வானியல், ஜோதிடம் முதலிய கலைகளில் அவர் சிறந்து விளங்கியதாகவும், 7 வகையான வாசனை திரவியங்களைத் தயாரிக்கும் கலை அறிந்தவர் என்பதும், 7 மொழிகளை பேசவும், எழுதவும் தெரிந்திருந்தார் என்பதும், எகிப்தை ரோமானியர்களிடம் இருந்து காப்பாற்ற தனது வாழ்வைத் தியாகம் செய்தவர் என்பதும் மறுக்கப்படாத கருத்துக்களாக உள்ளன.

பிற நிகழ்வுகள்

கிமு 30 – மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின் கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டார்.
1281 – மங்கோலியப் பேரரசர் குப்ளாய் கானின் கடற்படைகள் ஜப்பானை அணுகும்போது சூறாவளியில் சிக்குண்டு அதில் பயணம் செய்தவர்கள் இறந்தனர்.
1480 – ஒட்டோமான் படையினர் இஸ்லாம் மதத்திற்கு மாற ஒப்புக்கொள்ளாத 800 கிறிஸ்தவர்களை தலையை சீவிக் கொன்றனர்.
1499 – வெனிசியர்களுக்கும் ஒட்டோமான் துருக்கியர்களுக்கும் இடையில் முதற் போர் இடம்பெற்றது.
1833 – சிக்காகோ அமைக்கப்பட்டது.
1851 – ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1853 – நியூசிலாந்து சுயாட்சி பெற்றது.
1877 – அசாப் ஹோல் என்பவர் செவ்வாய்க்கோளின் டெய்மோஸ் என்ற சந்திரனைக் கண்டுபிடித்தார்.
1883 – கடைசி குவாகா (வரிக்குதிரை வகை) ஆம்ஸ்டர்டாமில் இறந்தது.
1914 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியா ஆஸ்திரியா-ஹங்கேரியுடன் போரை அறிவித்தது. பிரித்தானிய ராச்சியத்தின் அனைத்து குடியேற்ற நாடுகளும் இதனுள் அடங்கின.
1952 – மாஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள், கவிஞர்கள் கொல்லப்பட்டனர்.
1953 – சோவியத் ஒன்றியம் ஜோ 4 என்ற தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை நடத்தியது.
1960 – எக்கோ I என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.
1964 – இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாப்பிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது.
1978 – ஜப்பானும் மக்கள் சீனக் குடியரசும் தமக்கிடையே நட்புறவு, அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
1981 – ஐபிஎம் தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது.
1985 – ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானங்கள் மோதிக் கொண்டதில் 520 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காப்பாற்றப்பட்டனர்.
1985 – ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் 2ம் கட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
1990 – வீரமுனைப் படுகொலைகள், 1990: அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1990 – அமெரிக்கா, தென் டகோட்டாவில் டிரன்னொசோரஸ் என்னும் டைனசோரின் முழுமையான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
2000 – கே-141 கூர்ஸ்க் என்ற ரஷ்யக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியின் போது 118 பேருடன் பாரெண்ட்ஸ் கடலில் மூழ்கியது.
2005 – ஸ்ரீ லங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொழும்பில் அவரது வீட்டில், நீச்சல் தடாகத்தில் நீராடும் போது சுடப்பட்டு அடுத்த நாள் இறந்தார்.
2005 – இலங்கையின் தமிழ் வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா கொலை செய்யப்பட்டார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.