சீன அதிகாரிகளுக்கு விசா வழங்குவதில் அமெரிக்கா கட்டுப்பாடு

வாஷிங்டன்: சீனாவின் முக்கிய அதிகாரிகள் சிலருக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு விதிப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

சீனாவின் தன்னாட்சிப் பகுதியாக இருந்து வரும் திபெத், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள், பத்திரிகையாளர்கள் செல்ல சீன அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் சீன அதிகாரிகள் அமெரிக்காவுக்குள் சுதந்திரமாக பல்வேறு வசதிகளை அனுபவிக்கும் நிலை உள்ளது.

இதன் காரணமாக திபெத் பகுதிக்குள் செல்ல தடை விதிக்கும் சீன அரசு அதிகாரிகளுக்கு திபெத் அணுகல் சட்டப்படி விசா வழங்குவதில் கட்டுப்பாடு கொண்டு வரப்படுகிறது. திபெத்திய மக்களுக்கு நியாயமான முறையில் சுயாட்சி கிடைக்க ஆதரவு தருவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.