சீனாவின் 59 செயலிகளுக்கு தடை: பொதுமக்கள் வரவேற்பு

புதுதில்லி: டிக்-டாக், வி-சாட், ஹலோ உள்ளிட்ட செயலிகள் உள்பட சீனாவின் 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

குறிப்பாக இந்த செயலிகளை பயன்படுத்தி வந்தோரும், நாட்டு நலனைக் கருத்தில்கொண்டு அவற்றில் இருந்து வெளியேறுவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

டிக்-டாக், ஷேர் இட், யுசி பிரவுசர், கிளாஷ் ஆப் கிங்ஸ், டியு பேட்டரி ஷேவர், ஹலோ, யூகேம் மேக்கப், எம்.ஐ. கம்யூனிட்டி, வைரஸ் கிளீனர், பியூட்டி பிளஸ், வீ சாட், எக்ஸெண்டர் செல்பி சிட்டி, விவோ விடியோ, டியு ரெக்கார்டர் உள்ளிட்ட 59 செயலிகள் தடை செய்யப்பட்டவற்றில் அடங்கும்.

நாட்டில் எல்லையில் சமீபகாலமாக சீனத் துருப்புகள், இந்திய ராணுவத்துடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன. அத்துடன் எல்லையில் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சூழலில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இச்சூழலில், இந்திய மக்களை பாழ்படுத்தி வரும் சீன செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும். அவற்றின் மூலம் இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து நேரிடலாம் என உளவு அமைப்புகள் பரிந்துரை செய்தன. இந்த நிலையில்தான், 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு திங்கள்கிழமை இரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

நாட்டின், 130 கோடி மக்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு குறித்து, சமீப காலமாக கவலைகள் தெரிவிக்கப்பட்டன. ஒருசில செல்போன் செயலிகள் மக்களின் தனியுரிமைகளை தவறாக பயன்படுத்தி வருவது மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்துக்கு பல புகார்கள் வந்தன. நாட்டின் பாதுகாப்புக்கு சவால் விடும் வகையிலான இந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தற்போது 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.