இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எந்த அச்சுறுத்தலும் இல்லை-சீனா
பெய்ஜிங்: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று இந்தியாவுக்கான சீன தூதர் சன் வொய்டாங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியது:
இந்தியா – சீனா இடையிலான உறவை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இரு நாடுகளிடையே எந்த அச்சுறுத்தலும் இல்லை. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கொரோனா வைரஸை எதிர்த்து போராட வேண்டியதுதான் முக்கிய நோக்கமாக உள்ளது.
இரு தரப்பு பேதங்களையும் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண முடியும். இதை இந்த இருநாடுகளுமே தீர்த்துக்கொள்ளும்.
கருத்து வேறுபாடுகள் நம் உறவுகளை மறைக்கின்றன. நாம் ஒருபோதும் அதனை விட்டு விடக்கூடாது என்று கூறினார்.
லடாக் எல்லைப் பகுதியில் சீனா தனது ராணுவத்தை குவித்து வருகிறது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் படைகளைக் குவித்து வருகிறது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையே சமரசம் பேச அமெரிக்கா தயார் என டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் மூன்றாவது நாடு தங்கள் பிரச்னையில் தலையிடுவதற்கு வாய்ப்பில்லை என மறைமுகமாக சீன தூதர் சன் வொய்டாங் தெரிவித்துள்ளார்.
அதேபோல் சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாஹோ லிஜியானும் இதே கருத்தை நிருபர்களிடம் கூறியுள்ளார். இந்திய-சீன எல்லைப் பிரச்னை இரு நாடுகளுக்கு இடையேயானது. அதுவும் இப்போதைய சூழலில் தேவையில்லாதது என்று கூறியுள்ளார்.
You must log in to post a comment.