சென்னையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன். 29: சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவல்லிக்கேணி அஞ்சல்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் , பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும்,  நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.

சேப்பாக்கம் பகுதி காங்கிரஸ் தலைவர் தணிகாசலம், வட்டத் தலைவர்கள் தணிகைவேல், ஜெ.வாசுதேவன், மாவட்ட துணைத் தலைவர் கேவி.யுவராஜ், நிர்வாகிகள் கடல் தமிழ்வாணன், பொன்வண்டு ரவி, சாரதி, அன்பழகன், நாகராஜ், அலாவுதீன், மணிபால், அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.