சோசலிசப் புரட்சியாளர் சே குவேரா பிறந்த நாள்

சே குவேரா (Che Guevara) என அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதிகியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர். இன்று அவரது பிறந்த நாள்.

போக்லாந்துத் தீவுகள் – விடுதலை நாள்
ஐக்கிய அமெரிக்கா – கொடி நாள்
ஆப்கானிஸ்தான் – அன்னையர் நாள்
உலக இரத்த வழங்கல் நாள்
உலக வலைப்பதிவர் நாள்

பிற நிகழ்வுகள்

1789 – பவுண்டி என்ற பிரித்தானியக் கப்பலின் மாலுமிகளின் கிளர்ச்சியை அடுத்து கப்பலின் தலைவனுடன் சேர்ந்து சிறிய படகொன்றில் தப்பிய 19 பேர் 7,400 கிமீ தூரம் பயணித்து திமோரை அடைந்தனர்.
1800 – நெப்போலியனின் பிரெஞ்சு ராணுவத்தினர் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று இத்தாலியை மீண்டும் கைப்பற்றினர்.
1807 – நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் போலந்தின் பிரீட்லாந்து என்ற இடத்தில் ரஷ்யப் படைகளுடன் மோதி வெற்றி பெற்றனர்.
1821 – வடக்கு சூடானின் சென்னார் பேரரசன் மன்னன் ஏழாம் பாடி ஒட்டோமான் பேரரசின் தளபதி இஸ்மாயில் பாஷாவிடம் சரணடைந்தார். சென்னார் பேரரசு முடிவுக்கு வந்தது.
1846 – கலிபோர்னியாவின் சொனோமா என்ற இடத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் மெக்சிக்கோ மீது போரை தொடங்கி கலிபோர்னியாவைக் குடியரசாக அறிவித்தனர்.
1900 – ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

1929 – சோசலிசப் புரட்சியாளர் சே குவேரா பிறந்த நாள்
1931 – பிரான்சில் சென் ஃபிலிபேர்ட் என்ற படகு மூழ்கியதில் 500 பேர் இறந்தனர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பாரிசை ஜெர்மனி கைப்பற்றியது.
1941 – அனைத்து ஜெர்மனிய மற்றும் இத்தாலிய சொத்துக்களையும் ஐக்கிய அமெரிக்கா முடக்கியது.
1962 – ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.
1967 – சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டைச் சோதித்தது.
1967 – மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது.
1982 – போக்லாந்து தீவுகளின் தலைநகர் ஸ்டான்லியில் நிலைகொண்டிருந்த ஆர்ஜெண்டைனாப் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்தன. போக்லாந்து போர் முடிவுக்கு வந்தது.
1985 – கிரீசில் இருந்து ரோம் சென்ற விமானம் ஹெஸ்புல்லா இயக்கத்தினரால் கடத்தப்பட்டது.
1999 – தென்னாபிரிக்காவின் அதிபராக தாபோ உம்பெக்கி பதவியேற்றார்.
2002 – கராச்சியில் அமெரிக்க தூதராலயத்துக்கு முன்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12பேர் கொல்லப்பட்டு 50 பேர் காயமடைந்தனர்.
2007 – காசாப் பகுதி தமது முழுக்கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்தது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.