சாட் விடுதலை நாள்

சிறப்பு நாள்

சாட் – விடுதலை நாள் (1960)
பிரேசில் – மாணவர் நாள்

பிற நிகழ்வுகள்                                               

கிமு 2492 – ஆர்மீனியா அமைக்கப்பட்டது.
கிமு 480 – பாரசிகர்கள் கிரேக்கர்களை கடல்போரில் வென்றனர்.
கிமு 586 – ஜெருசலேமில் மன்னர் சாலமன் கட்டிய முதலாவது ஆலயம் பாபிலோனியர்களினால் அழிக்கப்பட்டது.
355 – நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட குளோடியஸ் சில்வானஸ் ரோமப் பேரரசனாகத் தன்னை அறிவித்தான்.
1786 – மலேசியாவில் பெனாங்க்கில் கப்டன் பிரான்சிஸ் லையிற் என்பவனால் பிரித்தானியக் குடியேற்றம் அமைக்கப்பட்டது.
1804 – இரண்டாம் பிரான்சிஸ் ஆஸ்திரியாவின் முத்லாவது மன்னர் ஆனார்.
1812 – இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது.
1898 – அமெரிக்கப் படைகள் புவெர்ட்டோ ரிக்கோவின் மயாகெஸ் நகரினுள் நுழைந்தன.
1920 – லாத்வியாவின் அதிகாரத்தை போல்ஷெவிக் ரஷ்யாவிடம் வழங்கும் உடன்பாடு லாத்வியாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் ஏற்பட்டது.
1954 – கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கேற்ற 16 தமிழர்கள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1960 – பிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது.
1965 – கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வாட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
1972 – வியட்நாம் போர்: கடைசி அமெரிக்க தாக்குதல் படையினர் தென் வியட்நாமை விட்டுப் புறப்பட்டனர்.
1975 – போர்த்துக்கீசத் தீமோரில் உள்நாட்டுக் கலவரம் தொடங்கியதில் அதன் ஆளுநர் “மாரியோ லெமொஸ் பிரெஸ்” தலைநகர் டிலியை விட்டுத் தப்பினார்.
1984 – வானொலி ஒன்றுக்காக தனது குரலை சோதிப்பதற்காக அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் கூறியது: “எனது சக அமெரிக்கர்களே, ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்”.
1999 – ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.
2003 – ஆப்கானிஸ்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ நாடுகள் அனுப்பின.
2003 – ஜெமா இஸ்லாமியா இயக்கத் தலைவர் ரிதுவான் இசாமுதீன் (ஹம்பாலி) பாங்கொக் நகரில் கைது செய்யப்பட்டார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.