நாளை சென்னை வருகிறது மத்தியக் குழு
சென்னை: கொரோனா நோய்த் தடுப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு புதன்கிழமை மாலை மத்தியக் குழு சென்னை வருகை தரவுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 1.12 லட்சத்தைக் கடந்துவிட்டது. அதேபோல் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 1510-ஐ கடந்துள்ளது. இச்சூழலில் நாட்டிலேயே அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 2-ஆவது இடத்துக்கு தமிழகம் வந்துள்ளது. இந்நிலையில், கொரோனா நோய்த் தடுப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக மத்தியக் குழு புதன்கிழமை தமிழகம் வருகை தரவுள்ளது.
பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரும் மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையில் குழுவினர் முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
You must log in to post a comment.