ஆண்ட்ராய்டு செல்போன் பேட்டரி ஆயுள் நீடிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

சென்னை: இன்றைக்கு கிராமப்புறங்களில் கூட சாதாரண செல்போன்களை பயன்படுத்துவோர் குறைவாகிவிட்டது. எல்லோர் கையிலும் ஆண்ட்ராய்டு செல்போன்தான்.
கோடை வந்தாலே மின்தடையும் தவிர்க்க முடியாத ஒன்று. பல நேரங்களில் நாம் செல்போன்களில் உள்ள பேட்டரி முழுமையாக செலவான பிறகுதான் திரும்பவும் ரீ-சார்ஜ் செய்வோம். இத்தகைய நடைமுறையில் நம்முடைய அவசரத் தேவைக்கு செல்போனை பயன்படுத்த முடியாத இக்கட்டான நிலை ஏற்படுவதுண்டு.
எல்லோரும் பேட்டரி பேங்க் வைத்துக் கொள்வதும் இல்லை. இந்த நிலையில் நம்முடைய செல்போனில் விரைவாக பேட்டரி சார்ஜ் குறைவதைத் தடுப்பதும், அதன் ஆயுள் அதிகரிப்பதையும் பின்பற்றுவது அவசியமாகிறது. அதுவும் ரீ-சார்ஜ் செய்ய முடியாத இடங்களில் சிக்கிக் கொள்ளும்போது பேட்டரி விரைவாக தீராமல் இருப்பதற்கு சில அணுகுமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.
நம்முடைய ஜிபிஎஸ் லொக்கேஷன் ஆன் செய்யப்பட்டிருந்தால் அதை அணைத்துவிட வேண்டும். அது மிக அதிகமான பேட்டரி சக்தியை விரையமாக்கும். முடிந்தவரை தேவையான நேரத்தில் மட்டுமே ஜிபிஎஸ் ஆனில் இருந்தால் போதும். இந்த நடைமுறையை வழக்கமாக நம்முடைய பயன்பாட்டு காலத்தில் பின்பற்றுவது நல்லது.
நீங்கள் பயன்படுத்தும் ஆன்ட்ராய்டு செல்போனில் OLED திரையிருந்தால் அது பேட்டரியை சேமிக்க உதவும். அத்துடன் டார்க் தீமை தேர்வு செய்வதன் மூலம் உங்கள் செல்போனை திரையை ஒளிரச் செய்வதற்கான சக்தி சேமிக்கப்படும்.
தேவையற்ற செயலிகளை நீக்கி விடவும். நாம் வழக்கமான செயலிகளை பயன்படுத்திவிட்டு அதன் இயக்கத்தை நிறுத்தாமல் வெளியேறுவதால் தொடர்ந்து அந்த செயலி இயங்குவதற்கு சக்தி வீணாகிறது. இதனால் நாம் அடிக்கடி ரீசன்ட் அய்ட்டம்ஸ் பகுதியை கிளீன் செய்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.
அதேபோல் ஃபேஸ்புக் லைட், மெசேஞ்சர் லைட் போன்ற பதிப்புகளை பயன்படுத்தலாம். அதேபோல் செயலிகள் வழியாக ஒருசில சேவைகளுக்கு பயன்படுவதைத் தவிர்த்து வெப்-ப்ரவுசர் வழியாக செல்வதை வாடிக்கையாகக் கொள்ளலாம்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.