கர்நாடக இசைக் கலைஞர் எம். பாலமுரளிகிருஷ்ணா பிறந்த நாள்

கர்நாடக இசைத் கலைஞர் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா தென்னிந்திய மொழிகள் உள்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடும் வல்லமை பெற்றிருந்தார். இசை மேதை, பல்-வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர்,  குணசித்திர நடிகர் என பன்முகங்கள் அவருக்கு உண்டு. தனது வாழ்நாளில் 25 ஆயிரம் இசைக் கச்சேரிகளை அவர் நிகழ்த்தியுள்ளார்.

ஒரு பின்னணிப் பாடகராக தென்னிந்தியத் திரைப்படங்களில் பங்களித்தார். சதி சாவித்திரி  எனும் தெலுங்குத் திரைப்படத்தில் முதன்முதலாக அவர் பாடினார். பின்னணிப் பாடகி  பி. லீலா இவருடன் இணைந்து பல பாடல்களை பாடியுள்ளார்.

சிறப்பு நாள்

ஆசிரியர் நாள் (பெரு)
விடுதலை நாள் (மலாவி, 1964)
விடுதலை நாள் (கொமொரோஸ், 1975)

பிற நிகழ்வுகள்

1044 – புனித ரோமப் பேரரசின் மூன்றாம் ஹென்றி ஹங்கேரி மீது படையெடுத்தார்.
1189 – முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார்.
1483 – 3-ஆம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார்.
1484 – போர்த்துக்கீச மாலுமி டியாகோ காவோ கொங்கோ ஆற்றின் வாயிலைக் கண்டார்.
1535 – சேர் தோமஸ் மோர் நாட்டுத் துரோகத்துக்காக இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியினால் தூக்கிலிடப்பட்டார்.
1560 – ஸ்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் எடின்பரோ ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
1785 – டாலர் ஐக்கிய அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
1854 – ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் முதலாவது மாநாடு மிச்சிகனில் நடைபெற்றது.

1870 – தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் பிறந்த நாள்
1885 – பிரெஞ்சு வேதியியலாளர் லூயி பாஸ்டர் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை விசர் நாய் ஒன்றினால் கடிபட்ட 9 வயது யோசப் மைசிட்டர் என்ற சிறுவனிடம் வெற்றிகரமாகச் சோதனை செய்தார்.
1892 – தாதாபாய் நௌரோஜி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1893 – அயோவாவின் பொமெரோய் நகரில் நிகழ்ந்த சூறாவளியினால் 71 பேர் கொல்லப்பட்டனர்.
1908 – ரொபேர்ட் பியரி ஆர்க்டிக்குக்கான தனது பயணத்தை தொடங்கினார். இப்பயணத்தில் அவர் வட முனையை அடைந்தார்.

1930 – கர்நாடக இசைக் கலைஞர் எம். பாலமுரளிகிருஷ்ணா பிறந்த நாள்.
1935 – சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது.
1939 – ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.
1944 – கனெக்டிகட்டில் கழைக்கூத்து அரங்கில் இடம்பெற்ற பெரும் தீயில் சிக்கிய 168 பேர் கொல்லப்பட்டனர்.
1947 – சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கிகளை தயாரிக்கத் தொடங்கியது.

1956 – சிங்களம் இலங்கையின் அதிகாரபூர்வ மொழியானது.
1964 – மலாவி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1966 – மலாவி குடியரசானது.
1967 – நைஜீரியப் படையினர் பயாஃப்ராவினுள் நுழைந்து போரைத் தொடங்கினர்.
1975 – கொமொரோஸ் பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1988 – வட கடலில் எண்ணெய் அகழ்வு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 167 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
2005 – லண்டன் நகரம் 2012-ஆம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
2006 – 44 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோ-சீனப் போரின் போது மூடப்பட்ட சிக்கிமையும் திபெத்தையும் இணைக்கும் நது லா பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.