விடைத்தாள் முன்னேற்ற அறிக்கை முகாமில் கபசுரகுடிநீர் விநியோகம்

வேலூர், ஜூன், 29: வேலூர், சத்துவாச்சாரி எத்துராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள விடைத்தாள் முன்னேற்ற அறிக்கை ஆவணங்கள் சமர்ப்பிப்பு முகாமில் பணியில் உள்ள ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. 

 ஆரோக்கியம் சிறப்பு திட்டத்தினை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன் அடிப்படையில் கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், விடைத்தாள்கள், முன்னேற்ற அறிக்கை சமர்பிக்கும் முகாமில் கபசுர குடிநீர் ஜுனியர் ரெட்கிராஸ், காட்பாடி ரெட்கிராஸ் சார்பில் வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் மு.அங்குலட்சுமி வழங்கினார். 

பத்தாம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு நிறுத்தப்பட்ட பாடங்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள், முன்னேற்ற அறிக்கை மற்றும் சரிபார்ப்பு படிவங்கள் சார்பான  ஆவணங்கள்  ஒப்படைக்கப்படுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வேலூர் சத்துவாச்சாரி எத்துராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முகாமில்  வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சா.மார்ஸ் ஆலோசனையின் படி கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

தலைமையாசிரியர்கள் எம்.மகாலிங்கம், எ.சிவகுமார், பழனி, தாமோதரன், பள்ளி துணை ஆய்வாளர் மணிவாசகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் வேலூர் கல்வி மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் கே.குணசேகரன், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பின் பொருளாளர் வி.பழனி, ஆயுள் உறுப்பினர் வி.காந்திலால்பட்டேல், தன்னார்வ தொண்டர்கள் செ.ஜா.சோமசுந்தரம், மோனிகா உள்ளிட்டோர் கபசுரகுடிநீர் வழங்க உதவினர். 

காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்துடன் இணைந்து வேலூர் கல்வி மாவட்ட ஜுனியர் ரெட்கிராஸ் செயலாற்றியது. முகாமில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆசிரியரல்லா பணியாளர்கள், ஆவணங்கள் ஒப்படைக்க வந்த தலைமையாசிரியர்கள், இருபால் ஆசிரிய பெருமக்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.