புதிய புயல் புரெவி
சென்னை: வங்க கடலில் தற்போது உருவாகி வரும் புதிய புயல் ‘புரெவி’ காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதன் காரணமாக தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறி நாகை அல்லது கடலூர் கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய புயலுக்கு புரெவி (Burevi) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
You must log in to post a comment.