August 10, 2022

Mithiran News

We can read swadesamithiran.com news in any language

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது கரையைக் கடக்கும்?

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை மாலை ஸ்ரீஹரிகோட்டாவுக்கும், காரைக்காலுக்கும் இடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணாக வடகடலோர தமிழக மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டத் தகவல்:

தெற்கு வங்க்க் கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக கடற்கரை பகுதியை வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நெருங்கும்.

அதைத் தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வடதமிழகம், புதுச்சேரி கடற்கரையை காரைக்காலுக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையில் கடலூர் அருகே மாலையில் கரையைக் கடக்க கூடும்.

இதன்காரணமாக வடகடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் 11-ஆம் தேதி காலை முதல் வீசக்கூடும்.

10-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிக கன மழை பெய்யும்.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையோ, மிக கனமழையோ பெய்யக் கூடும்.

கோவை, தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.