February 8, 2023

வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டம்: விரைந்து முடிக்க உத்தரவு

நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்

வேலூர்: காலதாமதம் ஆகிவரும் வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் வேலூர் மாநகராட்சியில் பொலிவு நகரம் திட்டம் (ஸ்மார்ட் சிட்டி) செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்,கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இப்பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனை நடந்தது இதில் அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர் 

பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியது:

வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத் தொகை ஒதுக்கி நீண்ட நாள்களானது. நியாயமாக பார்த்தால் பணிகளை முடித்து ஸ்மார்ட் சிட்டியை ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் 70 சதவிகித வேலைகள் பாக்கி உள்ளது.

புகழ்பெற்ற ஒப்பந்ததாரர்கள் வேலை செய்யவில்லை எல்&டி நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து அவர்கள் அதனை துணை ஒப்பந்தமிட்டனர் அதே போல் சுப்பையா என்பவர் ஒப்பந்தம் எடுத்து அவரும் துணை ஒப்பந்தம் விட்டார் ஆனால் இவர்கள் துணை ஒப்பந்தம் செய்யமாட்டோம் என கூறிவிட்டு ஒப்பந்தம் போட்டு துணை காண்ட் ராக்ட் விட்டிருக்கிறார்கள்.

ஆனால் ஒரு தெருகூட சேறும் சகதியுமில்லாமல் இல்லை ஆனால் தற்போது அவசர அவசரமாக தெருக்களில் பள்ளங்களை மூடுகிறார்கள் இதனால் குடிநீர் வாரியம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இணைந்து அதனை சரி செய்ய வேண்டும். ஏனோ தானோ என்ற நிலையில் பணிகள் நடந்து வருகிறது.

நான் வரும் 12-ஆம் தேதி மீண்டும் சாலைகளை ஆய்வு செய்யும்போது அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்திருக்க வேண்டும். இரண்டொரு நாளில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரள அரசு முல்லை பெரியாறு அணையை நிரப்பமாட்டோம் என்று கூறினார்கள் ஆனால் நாங்கள் நிரப்பி காட்டியுள்ளோம் என்றார் அமைச்சர்.

விடியோ – அமைச்சர் துரைமுருகன் பேட்டி: