ஜெய்பீம் படத்துக்கு கிடைத்த மற்றொரு இலவச விளம்பரம்
சென்னை: ஜெய்பீம் படத்தில் சாதி குறியீட்டை காட்டியதாக ஒருபுறம் பாமக அன்புமணி குரல் எழுப்ப, மறுபுறம் அதற்கு நடிகர் சூர்யா பதில் அளிக்க என ஜெய்பீம் படத்தை பார்க்காதவர்கள் கூட போட்டிப்போட்டு பார்க்கத் தொடங்கி விட்டனர்.
இச்சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்ட ட்வீட் பாமக அன்புமணிக்கா அல்லது இன்றைக்கு ஒரு திரைப்படத்தை எந்த நோக்கத்தில் ஒரு சிலரின் அரசியல் பார்வை இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதற்கா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் திரௌபதி என்ற ஒரு படம் வெளியானது.. தமிழகமெங்கும் பரபரப்பாக பேசப்பட்ட படம் இது. ஒரு சாதியினர், உயர்தர சாதி பெண்களை எப்படியெல்லாம் திட்டமிட்டு நாடக காதல் செய்து மிரட்டி அனுபவிக்கிறார்கள் என்பதை இப்படம் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது என்றும், குறிப்பாக, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கெளசல்யா, தொல். திருமாவளவனின் கொள்கைகளை இப்படம் விவரிக்கிறது என்றும் பேசப்பட்டது.
அப்படத்தில் தொல். திருமாவளவன் போலவே ஒரு பாத்திரப் படைப்பும் உண்டு. இதுகுறித்து அப்போது திருமாவளவனிடம் கருத்து கேட்கப்பட்டபோது, அதற்கு திருமாவளவன், அந்த படத்தை நான் பார்க்கவில்லை.. படம் பார்க்க நேரமும் கிடைக்கவில்லை.. அதை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை” என பட்டென பதில் அளித்தார்.
இப்போது ஜெய்பீம் படம் பாமரர் முதல் பணக்காரர் வரை சாதி, மத, இன பாகுபாடின்றி இப்படத்தை பார்ப்பவர்களால் பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
ஆனால் இப்படம் வெளிவந்தது முதல் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. பாமக தரப்பில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக குரல் எழுப்பப்பட்டது. போதாக்குறைக்கு கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவுக்கு கேள்வி கணைகளைத் தொடுக்க, அதற்கு அவரும் பதில் அளித்தார். தொடர்புடைய காட்சிகள் நீக்கப்பட்டதாக அல்லது மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சூழலில் தொல். திருமாவளவனின் ட்வீட் மீண்டும் அரசியல் பார்வையாளர்களிடையே அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. திரௌபதி படம் குறித்து திருமாவளவன் அளித்த பதிலையும், ஜெய்பீம் படம் குறித்து அன்புமணி எழுப்பிய கேள்விகளையும் ஒப்பீடு செய்து விஜய் என்பவர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அதை தனது பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் தொல். திருமாவளவன். அத்துடன் கீழேயுள்ள ட்வீட்டை செய்துள்ள தம்பி யாரென்று தெரியவில்லை. எனினும் இவருடைய நேர்மைத் திறத்துக்கு எனது மனமார்ந்த நன்றி. இவரைப் போன்ற சனநாயக சக்திகள் உண்மைகளைச் சொல்ல வேண்டிய நேரத்தில் உரத்துச் சொல்வதுதான் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
More Stories
பாடம் நடத்தும் அண்ணாமலை; பாடம் கற்கும் பத்திரிகை நிருபர்கள்
பெட்ரோல், டீசல் விலை: மாநில அரசு நினைத்தால் செய்ய முடியும்!
மாவட்டம்தோறும் புத்தகக் காட்சி நடத்த நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின்