January 19, 2022

Mithiran News

We can read swadesamithiran.com news in any language

இந்த வார ராசி பலன்

நவம்பர் 28 முதல் டிசம்பர் 4 வரை

ஜோதிட ரத்னா து.ராமராமாநுஜதாஸன்

சங்கரி ஜோதிட ஆய்வு மையம், திருப்பத்தூர்

செல்போன்:94439 63761

மேஷம்: சில பணிகளில் தாமதம் ஏற்படும். இருப்பினும் முடிவு அருமையாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். சக பணியாளர்களிடம் கருத்து மோதல் கூடாது. பிறரை விமர்சனம் செய்வதால் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். இருப்பினும் தங்கள் பணிகள் செவ்வனே நடைபெறும். பிரியமான சிலரிடம் கூட யோசித்து பேசும் சூழல் உருவாகலாம். அலைச்சலுடன் ஆதாயம் உண்டு. கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பல வழிகளில் பணம் வந்து சேரும். இதனால் சேமிப்பு உயரும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

பரிகாரம்-கந்த சஷ்டி படிப்பது நன்று.

ரிஷபம்: குடும்பத்துடன் தீர்த்த யாத்திரைகள் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். புத்துணர்ச்சி பெருகும். தங்கள் முயற்சிக்கு உறவினர்கள், நண்பர்கள் என பலரும் ஒத்துழைப்பு நல்குவர். வாழ்வில் முன்னேற்றம் காண உங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி கிடைப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். ஆலயம் மற்றும் தர்ம காரியங்களுக்கு தலைமை ஏற்பீர்கள். கொடுக்கல்-வாங்கல் சீராகும். கலைத்துறையினருக்கு முக்கியஸ்தர்களின் அறிமுகத்தால் வாழ்வில் ஏற்றம் உண்டு. அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளை பெறுவர்.

பரிகாரம் – மகாலட்சுமி அஷ்டோத்திரம் படிப்பது நன்று.