வேலூர்மாவட்டம்,வேலூர் அருகே விஞ்சிபுரம் பாலாற்றில் சமீபத்தில் பெய்த மழைவெள்ளத்தால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டு வீடுகளும் சேதமடைந்தது அவைகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன்,நந்தகுமார் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஊராட்சிமன்ற தலைவர் குணசுந்தரி மற்றும் அரசு அதிகாரிகல் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார் பின்னர் மாதனூர் தரைப்பாலத்தையும் அவர்கள் ஆய்வு செய்தனர்
பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழ்நாட்டை பொருத்தவரையில் 105 ஆண்டுகளுக்கு முன்னர் பெய்த மழையைப் போன்று பெருமழை பெய்துள்ளது. ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களின் மழைவெள்ளமும் பாலாற்றில் கலந்து வந்தது. இதனால் விரிஞ்சிபுரம் பாலம் 322 மீட்டர் பாலம் அடித்து செல்லப்பட்டது.
இப்பகுதியில் தற்காலிக போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படும் அதன் பின்னர் சுமார் ரூ.30 கோடியில் உயர் மட்ட பாலம அமைக்கப்படும்.
தமிழகத்தில் இந்த ஆண்டு 648 மேல்மட்ட பாலங்கள் முதற்கட்டமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பல இடங்களில் பாலத்தின் இணைப்பு சாலைகள் கரைந்து போய்விட்டன. ஒட்டுமொத்தமாக இன்னும் கணக்கு எடுக்கவில்லை 75 சதவிகிதம் பாலங்கள் சேதமடைந்துள்ளன.
மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டுள்ளோம் நெடுஞ்சாலைதுறைக்கு மட்டும் ரூ.1,444 கோடி நிதி கேட்டுள்ளோம் கன்னியாகுமரி, கடலூர் வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் உள்ளன.
தற்காலிகமாக நெடுஞ்சாலைத்துறைக்கு சி.ஆர் ஐடிபி நிதி ரூ.200 கோடி பயன்படுத்தபடவுள்ளது அதனை எடுத்து உடனே சாலைகள் பாலங்களை சீரமைக்க உள்ளோம். தடுப்பணையைக் கட்ட முதல்வருக்கு ஆய்வு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் எ.வ.வேலு.
அமைச்சரின் பேட்டி காணொளி-
More Stories
பாடம் நடத்தும் அண்ணாமலை; பாடம் கற்கும் பத்திரிகை நிருபர்கள்
பெட்ரோல், டீசல் விலை: மாநில அரசு நினைத்தால் செய்ய முடியும்!
மாவட்டம்தோறும் புத்தகக் காட்சி நடத்த நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின்