சென்னை, நவ.3: தீபாவளியையொட்டி ஒன்றிய அரசு டீசல் விலையில் ரூ.10-ம், பெட்ரோல் விலையில் ரூ.5-ம் குறைத்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் அதிகரித்து வந்த நிலையில் ஒன்றிய அரசின் இந்த திடீர் அறிவிப்பு வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விலை குறைப்பு தீபாவளி நாளான நவ.4 முதல் நடைமுறைக்கு வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாக குறை கூறி வந்தன. அத்துடன் கடந்த ஓரிரு மாதங்களாக இந்த விலை ஏற்றம் மிக அதிகமாகி வந்தது. இதனால் சரக்கு வாகனங்களின் வாடகை உயர்ந்து வந்ததால், பொருள்களின் விலையும் மெல்ல அதிகரித்து வந்தது.
இச்சூழலில் ஒன்றிய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
More Stories
தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு ஏன்?
தமிழகத்துக்கு ரூ.1,314.42 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு தொகை
பதைபதைக்கும் விடியோ வெளியானது