Swadesamithiran

Tamil online News – We can read in any language

ஸ்டான்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை

ரூ.2.14 கோடியில் நிறுவப்பட்டது



சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், தமிழக அரசு,  சிங்கப்பூரை சேர்ந்த தொழில் நிறுவனத்துடன் இணைந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை ரூ.2.14 கோடி மதிப்பில் நிறுவியுள்ளது.

இதை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் புதன்கிழமை தொடங்கி  வைத்தார். அப்போது அவர் பேசியது:கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவியநிலையில்,, அரசுடன் மக்கள் சேவையில் ஈடுபட தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்தோம்.

அதன்படி பல தனியார் நிறுவனங்கள் அரசுடன் கைகோர்த்தன. அதன் ஒரு பகுதியாக தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.2.14 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது.

இதன் மூலம் 100 நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. நவம்பர் மாதம் 100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கோடு பயணித்து வருகிறோம். வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மெகா’ தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.

தமிழகத்தில் ‘டெங்கு பாதிப்பு இதுவரை 4,483 பேருக்கு ஏற்பட்டுள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 516 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றார் அமைச்சர்.