தமிழக அரசு அதிரடி உத்தரவு
சென்னை: கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் உத்தரவு:
“அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட அளவில் இனசுழற்சி முறையை கடைப்பிடிக்க வேண்டும். அதில் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத் துறையால் வெளியிடப்படும் இடஒதுக்கீட்டு ஆணைகளை கடைப்பிடிக்க வேண்டும். இந்த நடைமுறையைப் பின்பற்ற ஏற்கெனவே ஆணையிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர், குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில் பெண்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும்.
இது உடனடியாக அமலுக்கு வருகிறது. அங்கன்வாடி, சத்துணவு திட்ட நேரடி பணிநியமனங்களில் விதவையர், மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
More Stories
பாடம் நடத்தும் அண்ணாமலை; பாடம் கற்கும் பத்திரிகை நிருபர்கள்
பெட்ரோல், டீசல் விலை: மாநில அரசு நினைத்தால் செய்ய முடியும்!
மாவட்டம்தோறும் புத்தகக் காட்சி நடத்த நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின்