முள்ளங்கி – பனீர் பொரியல் செய்வதற்கான பொருள்கள் அதன் செய்முறை விளக்கம்.
தேவை
முள்ளங்கித் துருவல் – ஒரு கப்
துருவிய பனீர் – 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – சிறிதளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை
ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, முள்ளங்கித் துருவல், உப்பு சேர்த்து வதக்கவும்.
சிறிது நேரம் கழித்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கிளறி மூடி வேகவிடவும்.

முள்ளங்கி வெந்ததும், பனீர் துருவல், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
More Stories
சௌசௌ – வெள்ளைக் கடலை தயிர்க் கறி
வொயிட் தோசை
பால் – பனீர் கொழுக்கட்டை