March 22, 2023

தமிழகத்துக்கு ரூ.1,314.42 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு தொகை

த்திய அரசு விடுவித்தது

தில்லி: தமிழகத்துக்கு ரூ.1,314.42 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக ரூ.17 ஆயிரம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ.1,314.42 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்துக்கு ரூ.3,053 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.