Swadesamithiran

Tamil online News – We can read in any language

மேலும் விலை உயர்ந்துள்ளது எரிவாயு சிலிண்டர்

சென்னை: வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் உயர்ந்துள்ளது.

சென்னை: வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் உயர்ந்துள்ளது.

சென்னை மாநகரில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.900-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.. இந்நிலையில், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலையை மேலும் உயர்வை சந்தித்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் ஒரு சிலிண்டரின் விலையை மேலும் ரூ.15 உயர்த்துள்ளன. இதையடுத்து சென்னை நகரில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை ரூ.915-ஆக அதிகரித்துள்ளது.

ஒருபுறம் பொருளாதார சரிவு, வேலைவாய்ப்பின்மையும், மற்றொரு புறம் கொரோனா காரணமான சகஜநிலைக்கு மக்கள் திரும்பத் தயாராகும் சூழலில் இந்த விலை உயர்வு நடுத்தர, சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்களை மேலும் பாதிப்புள்ளாக்குகிறது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.