அக்.5:இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் நேற்று மாலை முதல் முகநூல் பக்கம் முடங்கியது. அத்துடன் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களும் முடங்கின.
இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் போன்றவற்றின் தாக்கம் மிக அதிகம். இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்த சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை திடீரென முகநூல் பக்கம் முடங்கியது. அதைத் தொடர்ந்து வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களும் முடங்கின. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டதாக முகநூல் நிறுவனம் தெரிவித்தது. சுமார் 6 மணி நேர முடக்கத்துக்கு பின்னர் முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்டவை
இயல்பு நிலைக்கு திரும்பின.
முகநூல் முடங்கியதால் அந்நிறுவனத்தின் நிறுவனர் மார்க் சூகர்பெர்க், தனது சொத்து மதிப்பில் 6 பில்லியன் (சுமார் 44 ஆயிரம் கோடியை) டாலரை இழந்தார். இதையடுத்து அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
திங்கள்கிழமை மட்டும் பங்கு சந்தையில் 4.9 சதவீதம் அளவுக்கு முகநூல் நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன. ஏற்கெனவே செப்டம்பர் பாதிக்குப் பிறகு அந்நிறுவனங்களின் பங்குகள் 15 சதவீதம் சரிவை சந்தித்த்து குறிப்பிடத்தக்கது.
More Stories
உக்ரைன் போர் பதற்றம்: இந்தியர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை
இந்தியா வளர்ச்சியடைந்தால் உலகம் வளர்ச்சி பெறும்
Britain’s lighthouse standing there since 17th century