வொயிட் தோசை தயாரிப்பதற்கான பொருள்கள் மற்றும் செய்முறை விளக்கம்
தேவையான பொருள்கள்
பச்சரிசி – ஒரு கப்
தேங்காய்த் துருவல்
அரை கப் சர்க்கரை
ஒரு டீஸ்பூன் நெய்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்துத் தேங்காய்த் துருவல் சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும்.
அதனுடன் சர்க்கரை, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ரவா தோசை பதத்துக்குக் கரைக்கவும்.

தோசைக்கல்லைக் காயவைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிதளவு நெய்விட்டு மூடி வேகவிட்டு எடுக்கவும்.
இரண்டு நிமிடங்களில் வெந்துவிடும்; திருப்பிப் போடத் தேவையில்லை.
இதற்குத் தக்காளிச் சட்னி சரியான காம்பிஷேனாக இருக்கும்.
More Stories
சௌசௌ – வெள்ளைக் கடலை தயிர்க் கறி
முள்ளங்கி – பனீர் பொரியல்
பால் – பனீர் கொழுக்கட்டை