January 19, 2022

Mithiran News

We can read swadesamithiran.com news in any language

உடனடியாக மத்திய அரசின் நிதித் தேவை

காங். தலைவர் கே.எஸ்.அழகிரி

வேலூர்: மழைவெள்ளத்தால் தமிழகம் முழுவதும் விவசாயம் முற்றிலும் அழிந்துள்ளது. மத்திய அரசு குழு பார்வையிட்டு இதுவரையில் நிதி வழங்கப்படவில்லை மத்திய அரசு உடனடியாக தமிழக அரசுக்கு நிதியளிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக் கொண்டார்.

வேலூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைப்யணத்தைத் தொடங்கி வைக்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் விலைவாசி உயர்ந்துள்ளது அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் இதுகுறித்து மக்களிடம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபயணம் நடத்தப்படுகிறது.

நீட் தேர்வு விரும்பும் மாநிலங்களில் நடத்திகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து அந்தந்த மாநிலத்தின் விருப்பத்திற்குவிட்டுவிட வேண்டும்.

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவு அதிக அளவு மழைபெய்துள்ளது விவசாயம் தமிழகத்தில் முற்றிலும் அழிந்து போய்யுள்ளது.  எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மாநிலத்தில் பல லட்சம் கோடி மதிப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசும் குழு அனுப்பி ஆய்வு செய்துள்ளது ஆனால் இந்த இழப்பீட்டுக்கு முன்தொகையாக ஒரு பெருந்தொகையை மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் மழைகால மீட்பு பணிகளில் தமிழக முதல்வர் துரிதமாக செயல்பட்டார். வெள்ள நிவாரண பணிகள் சிறப்பாக இருந்தது இதனை பாராட்டுகிறோம்.

வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியின்தான் இருப்போம் என நம்புகிறோம். இருப்பினும் கூட்டணி கட்சிகளுக்கு மிக்க் குறைந்த இடங்களை ஒதுக்குவது வேதனையளிக்கிறது. அதனால் இம்முறை பேசி அதிக இடங்களை பெற முயற்சிப்போம்.

சிறைகைதிகள் விடுதலையில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கருத்துவேறுபாடு கிடையாது. தமிழகத்தில் கட்டுமான பொருள்களான கம்பி சிமெண்ட் மணல் உள்ளிட்டவை கடுமையாக விலை உயர்ந்துள்ளன இந்த விலை உயர்வால் மக்கள் பாதிக்கின்றனர் எனவே இதனை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் கழிவுகளை எரிக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது இதனால் மாசு ஏற்படும் என்றார் கே.எஸ்.அழகிரி.

மாவட்டத் தலைவர் டீக்காராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்

கீழே வேலூரில் அவர் அளித்த பேட்டியின் காணொளி…