August 10, 2022

Mithiran News

We can read swadesamithiran.com news in any language

பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: இரு தினங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சில நாள்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னை பெருநகரில் பல இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தொடர்ந்து பார்வையிட்டு வந்தார். 4-ஆவது நாளாக புதன்கிழமையும் அவர் பல்வேறு இடங்களில் பார்வையிட்டார்.

இந்நிலையில், அடுத்த இரு தினங்களுக்கு சென்னையில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையொட்டி சென்னைக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு, தியாகராய நகரில் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றும் பணியையும் ஆய்வு செய்தேன். இருநாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என பதிவிட்டுள்ளார்