சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவராக எஸ். வயிரவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பபாசி என்று அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை (26.11.2021) வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.
இத்தேர்தலில் குமரன் பதிப்பகம் எஸ்.வயிரவன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாதம் கீதம் எஸ்.கே.முருகன் மீண்டும் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லியோ புக்ஸ் ஏ.குமரன் பொருளாளராகவும், வனிதா பதிப்பகம் பெ.மயிலவேலன் துணைத் தலைவராகவும் (தமிழ்), மதுரை, சர்வோதய இலக்கியப்பண்ணை வி.புருஷோத்தமன் துணைத் தலைவராகவும் (ஆஙகிலம்) தேர்வாகினர்.
முல்லை பதிப்பகம் மு. பழநி இணைச் செயலாளராகவும், உணவு உலகம் பப்ளிகேஷன்ஸ் இராம மெய்யப்பன் துணை இணைச் செயலாளராகவும் (தமிழ்), டைகர் புக்ஸ் எஸ் சுப்பிரமணியன் துணை இணைச் செயலாளராகவும் (ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நிர்வாகக்குழு தமிழ் உறுப்பினர்களாக நக்கீரன் ஆர்.தனுஷ், ஐஎஃப்டி ஐ.ஜலாலுதீன், புலம் லோகநாதன், தமிழ்ச் சோலை பதிப்பகம் எஸ்.பிரபாகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நிர்வாகக்குழு ஆங்கிலம் உறுப்பினர்களாக மயூரா புக்ஸ் ஏ.காளியப்பன், ஸ்பைடர் புக்ஸ் ஐ. முபாரக், டெக்னோ புக்ஸ் நந்த் கிஷோர், ஜெய்கோ கே.ஸ்ரீராம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினரர்களாக ஜே.ஹரிபிரசாத், ஏ.எஸ்.மகேந்திரன், எஸ்.ராம்குமார், ஆர்.சங்கர் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
இவர்கள் 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை இப்பொறுப்புகளை வகிப்பர்.
More Stories
பெட்ரோல், டீசல் விலை: மாநில அரசு நினைத்தால் செய்ய முடியும்!
மாவட்டம்தோறும் புத்தகக் காட்சி நடத்த நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வடலூரில் தைப்பூச விழா கொடியேற்றம்