தமிழக அரசு புதிய உத்தரவு
சென்னை, செப்.25: முதலமைச்சரின் தனிப்பிரிவில் குறைகளைத் தெரிவிக்க எந்த படிவமும் வாங்கத் தேவையில்லை. வெறும் வெள்ளைத் தாளில் குறைகளை எழுதி அதை மனுவாக அளித்தாலே போதும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், பொதுமக்களின் குறைகளை கேட்டறிய உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்பிரிவில் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தொடர்புடையவருக்கு பதில் அளிக்கப்பட்டு வருகிறது.
நாள்தோறும் முதல்வர் அலுவலகத்துக்கு மக்கள் திரளானோர் வந்து மனு அளித்தவாறு உள்ளனர். இவற்றில் மிக முக்கியப் பிரச்னைகள் முதல்வரின் தனி கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு அவரது உத்தரவு அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்படுகிறது.
இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை இணையதளம் வாயிலாக அனுப்புவதற்கு அத்தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது தலைமைச் செயலகம் வரும் மக்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க பணம் கொடுத்து கோரிக்கை படிவம் வாங்கத் தேவையில்லை. அவர்கள் வெள்ளைத் தாளில் எழுதி அளித்தால் போதும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் இணையதளம் வழியாக தங்கள் கோரிக்கைகளை பொதுமக்கள் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
More Stories
பாடம் நடத்தும் அண்ணாமலை; பாடம் கற்கும் பத்திரிகை நிருபர்கள்
பெட்ரோல், டீசல் விலை: மாநில அரசு நினைத்தால் செய்ய முடியும்!
மாவட்டம்தோறும் புத்தகக் காட்சி நடத்த நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின்