சென்னை, செப்.25: இன்னும் 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக வலுவடைந்து ஞாயிற்றுக்கிழமை மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக் கடலில் நிலைகொண்டுள்ளது. புயலாக மாறி வடமேற்கு திசையை நோக்கி நகரும் இது ஒடிசா-ஆந்திர மாநிலங்கள் இடையே கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக உருவாகியுள்ள இப்புயலுக்கு பாகிஸ்தான் பரிந்துரை செய்துள்ள குலாப் எனப் பெயரிடப்படுகிறது.

More Stories
பாடம் நடத்தும் அண்ணாமலை; பாடம் கற்கும் பத்திரிகை நிருபர்கள்
பெட்ரோல், டீசல் விலை: மாநில அரசு நினைத்தால் செய்ய முடியும்!
மாவட்டம்தோறும் புத்தகக் காட்சி நடத்த நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின்